யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்து செயற்கைக்கோள் வெளியிட்டுள்ளது.
வடகொரியா அண்மையில் பல சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதற்காக ஐ.நா. சபையும் பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தென்கொரியாவும் அவர்களுக்கு போட்டியாக நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அனுப்பினர். இந்த நிலையில் மாக்சர் என்னும் செயற்கைக்கோள் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதில் வடகொரியா நாட்டில் உள்ள யோங்பியோன் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்துள்ளது. மேலும் அந்த புகைப்படங்கள் கட்டுமான பணிகள் அங்கு நடைபெறுவதை நம்மிடையே உணர்த்துவது போல உள்ளன. ஏனெனில் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு நிலம் தோண்டப்படுவது போல ஒரு படம் உள்ளது. குறிப்பாக யோங்பியோன் யுரேனியம் ஆலையை மேம்படுத்தி அணுகுண்டு தயாரிப்பை வடகொரியா அதிகரிக்க திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.