கணினிகளை ஹேக் செய்து கொரானாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பு மருந்தின் தொழில்நுட்ப தரவுகளை வடகொரிய ஹேக்கர்கள் திருட முயற்சி செய்துள்ளதாக தென்கொரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜான்சன் & ஜான்சன், நோவாக்ஸ் இன்க் மற்றும் அஸ்ட்ராஜெனேகா போன்ற ஒன்பது தடுப்பு மருந்து நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளின் தரவுகளை வடகொரிய ஹேக்கர்கள் திருட முயன்றது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த திருட்டு முயற்சி அரங்கேறியுள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் உளவுத்துறை நிறுவனம் கூறியதாவது , எங்கள் நாட்டில் இயங்கிவரும்ஃபைசர் தடுப்பு மருந்து நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்ய வடகொரிய ஹேக்கர்கள் முயற்சி செய்துள்ளனர் . ஆனால் ஹேக்கர்களின் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியுள்ளது.
இந்த முயற்சி வெற்றியடைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? கிம்- ஜாங்- உன்னின் சர்வாதிகார ஆட்சி அந்த தரவுகளை பயன்படுத்துவதைவிட விற்க தான் முயற்சி செய்திருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வடகொரியா இதுவரை கொரோனா பாதிப்பின் நிலவரத்தை வெளியிடாமல் ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.