இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக இருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை முதன் முறையாக எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயகம் கைப்பற்றி விட்டது.
ஏறத்தாழ 200 வருடங்களாக கன்சர்வேடிவ் கட்சியின் வசமிருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹெலன் மோர்கன் கைப்பற்றினார். ஊழல் குற்றச்சாட்டு மற்றும் போரிஸ் ஜான்சன் மீதான மக்களின் விரக்தியே வாக்கெடுப்பின் முடிவாக வந்துள்ளதாக விமர்சனங்கள் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் தோல்விக்கு தான் பொறுப்பேற்று கொள்வதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.