வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டு வரும் நீர் இந்த குடமுழுக்குற்கு பயன்படுத்தவிருக்கிறது. பழனி கோவிலில் நாளை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
குடமுழுக்கு முடிந்த பின்னர் முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெறவிருக்கிறது. அதனால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்தே இதனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடமுழுக்கு நாளை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அவற்றை வீட்டிலிருந்தே தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமாக பக்தர்கள் குடமுழுக்கை காணலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.