Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகும் வடிவேலு….. எத்தனை படம்னு தெரியுமா…..?

நடிகர் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vadivelu Health : வடிவேலு உடல்நிலை குறித்து குட்நியூஸ் சொன்ன மருத்துவமனை!  அப்பாடா.. என நிம்மதியடைந்த ரசிகர்கள் | Hospital released health update  about vadivelu

இதனயடுத்து, இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சன் ரஜினியை வைத்து இயக்கும் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |