Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ: “வாத்தி கம்மிங் ஒத்து” விஜய்க்கே TUFF கொடுத்துருக்காரே…. வடிவேலு வெர்ஷன் வந்தாச்சு…!!

வாத்தி கம்மிங் ஒத்து விஜய் பாடலுக்கு வடிவேலு ஆடியிருக்கும் வடிவேலு வெர்சன் மீம்ஸை நீங்களே பாருங்களேன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதன்பிறகு கடந்த 29ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியிடப்பட்டது. தற்போது மாஸ்டர் உலக அளவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் உள்ள வாத்தி கம்மிங் ஒத்து பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குட்டீஸ் எல்லாருக்குமே இந்த பாடல் மிகவும் பிடித்து போனதால் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வடிவேலு வெர்ஷன் இணையத்தில் வெளியாகியுள்ளது. சும்மா சொல்லக்கூடாது ஒரிஜினலை விட வடிவேலு தான் மாஸ் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

வடிவேலுவின் வீடியோவை பார்த்தால் அந்த பாடலுக்கு ஆடிய விஜய் கூட சிரிக்காமல் இருக்க முடியாது அந்த அளவுக்கு அம்சமாக இருக்கிறார் வடிவேலு. வடிவேலு தான் எங்கள் தலைவன் இருப்பதால்தான் ஸ்டிரஸ் எல்லாம் எங்களுக்கு குறைகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். எந்த சூழலாக இருந்தாலும் முகபாவனை மீம்ஸ்களுக்கு பொருத்தமாக இருப்பார் நாம வடிவேலு.எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும், அத்தனை புகைப்படங்கள், வீடியோக்களுக்கு வடிவேலு தான் பேருதவியாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

https://twitter.com/i/status/1355995138804260867

Categories

Tech |