Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தார் பகுதியில் அங்குசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்புக்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரிசல்குளம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென லட்சுமியின் சேலை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கணவன் மனைவி இருவரும் சாலையில் விழுந்து விட்டனர்.

இந்த விபத்தில் அங்குசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரது மனைவி லட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |