இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யதில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கோடியக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), வேதாரண்யத்தை சேர்ந்த அருண் (28) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோடியக்கரையில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் ஐயப்பன் ,அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.