வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சம்பத் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் கிராமத்தில் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளாகுளம் கிராமம் கூட்டு சாலை அருகில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பத் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சம்பத்தை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சம்பத்தை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.