Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனம் மோதி விபத்து…. அய்யோ பாவம் இப்படி ஆயிட்டு…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சுக்கிலநத்தம்-மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகில் காயமடைந்த நிலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் அபீஸ் செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது தெரியவந்தது. அதன்பின் கால்நடை மருத்துவர் சத்தியபிரபா முன்னிலையில் அந்த மானுக்கு உடற்கூறு செய்யப்பட்டு பின் உடல் காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |