Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. சிறுத்தைக்கு நேர்ந்த விபரீதம்…. வனத்துறையினரின் விசாரணை….!!

வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆசனூர்-திம்பம் செல்லும் சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் சிறுத்தை மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியபோது “இறந்தது பெண் சிறுத்தை ஆகும். இந்த சிறுத்தை மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கண்காணிப்பு காட்சிகளை வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்ற அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |