மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் தொழிலாளி முருகன் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புறவடை தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.