சரக்கு வாகனத்தின் டயர் பழுதாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிடாகத்திற்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. இந்த வாகனத்தை சித்தானங்கூரை பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்நிலையில் இந்த வாகனம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் அரசு ஊழியர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சரக்கு வாகனத்தின் பின்பக்க இடதுபுற டயர் திடீரென பழுதானது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தது. இந்நிலையில் சரக்கு வாகன டிரைவர் சொக்கலிங்கம் எந்த வித பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு வெங்காய மூட்டைகளை அந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தின் டயர் பழுது பார்க்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.