பள்ளிக்கூடத்தில் வகுப்பு பாடல்களோடு சுற்றுச்சூழல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.
கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக் கொண்டி இருக்கும் புறாக்கள். கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படும் திணை பயிர்கள். திணை பயிர்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்கள். இத்தனை காட்சிகளும் பள்ளிக்கூடத்தில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னாள் நம்ப முடிகிறதா? திருவெற்றியூர் காலடி கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதோடு பறவைகளின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு கடத்துவதற்கு பள்ளிக்கூடத்தை பறவைகளின் புகலிடமாக மாற்றியிருக்கிறது. பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக மாதம் தலா ஒரு டன் கோதுமை, திணை பயிர்களை வாங்கி வைக்கிறது.காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதியார் பாடலை சொல்லி கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பாதுகாப்பதற்காக கூடுகட்டி தருகிறது.
சிட்டுக் குருவிகள் வந்து குஞ்சு பொறிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பறையின் நுழைவு வாயிலின் மேலே குருவிக்கூடு பொருத்தி இருக்கின்றனர். பள்ளியில் கற்றுக்கொண்ட இந்த பாடத்தை மாணவர்கள் வீடுகளில் பின்பற்றுவதற்காக அவர்களுக்கு கூண்டுகள் கொடுக்கும் திட்டத்தைம் தொடங்கியிருக்கின்றனர். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக மாடி தோட்டத்தில் சிறிய அளவில் கம்பு போன்ற பயிர்களை தொட்டிகளில் வளர்க்கின்றனர் பறவைகளுக்காக தண்ணீர் தொட்டி களையும் அமைத்திருக்கின்றனர் குடும்பம் என்ற அமைப்பில் இருந்து சமூகம் என்ற அமைப்புக்குள் குழந்தைகளை அனுப்பி வைப்பது பள்ளி, கல்லூரிகள். அங்கு சுற்றுச்சூழல் குறித்தும் பறவைகளின் முக்கியத்துவம் குறித்தும் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.