Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்….. வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததோடு, அங்கு மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 225 மீட்டர் நீளம் கொண்ட பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ சத்யா அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை சீரமைத்து தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு சுற்று சுவரை புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Categories

Tech |