Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்…!

வாய் சம்பந்தமான சில பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே வைத்தியம் செய்து கொள்ளலாம்…

1. அகத்திக்கீரை மற்றும் வெங்காய சாறு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் சரியாகும்.

2. ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாவறட்சி நீங்கிவிடும்.

3. கிராம்பை நசுக்கி பல் வலி உள்ள பகுதியில் வைத்தால் பல் வலி சரியாகும்.

4. ஒரு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு சேர்த்து மென்று அதை பல்வலி உள்ள பகுதியில் வைத்துக் கொள்ள பல்வலி குணமடையும்.

5. வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

6. பல்வலி குறைய ஆரஞ்சு பழத்தின் தோலை வாயில் போட்டு மென்று அதைத் துப்பி விடவும்.

7. துளசி மற்றும் வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

8. மோரில் உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு துப்பி விடவும். இது போல ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் வாய்ப் புண் குணமடையும்.

9. பாகற் காயை கசக்கி சொத்தை பற்களின் மீது வைத்தால் வலி சரியாகும்.

10. வாழைப்பழத்தைத் தயிருடன் சேர்த்து காலை உணவாக உட்கொண்டு வந்தால் வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறைந்துவிடும்.

11. மாதுளம் பழத்தின் தோலை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

12. அரை லிட்டர் நீரில் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

13. அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பதனால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

14.வல்லாரை கீரையை இடித்தோ அல்லது அரைத்தோ சிறிதளவு சாறு எடுத்து அதை புண்ணின் மீது பூசினால் வாய்ப்புண் குணமடையும்.

 

Categories

Tech |