வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பாலப்பட்டி பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் காங்கேயத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவரது நண்பரான ராஜேஷ் என்பவர் சென்று கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து பிரகாஷ் நீண்ட நேரம் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ராஜேஸ் ஜன்னல் வழியா பார்த்துள்ளார்.
அப்போது பிரகாஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷின் உடலை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.