Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை கரையோர பகுதியில் வசிக்கும்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!

உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .

இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 அடியை எட்டியதால்  உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பியதால் 2,1 39 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |