வாய்க்காலை தூர் வராததால் மின் பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்ச்செருவாயில் இருக்கும் ஏரியில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஒரு கிளை வாய்க்கால் வழியாக பொண்ணடம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் வருகின்றது.
பின்னர் மறைவாக அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களையும் மற்றும் பெண்ணாடத்தில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள் மற்றும் மின் ஊழியர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளை வாய்க்காலை தூர் வாரி வெலிங்டன் ஏரி நீர் முழுமையாக பாசனத்திற்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்