வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் ஓடை பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கின்றது. அங்கு ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனையடுத்து 3 வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.