Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. வாய்க்காலில் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணிமகாராஜபுரம் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்ற சோனமுத்து திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது மனைவி சோனமுத்துவை எல்லா இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில் மகாராஜபுரம் மரப்பாலம் வாய்க்கால் தண்ணீரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வள்ளிக் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோனமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோனமுத்து எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |