Categories
மாநில செய்திகள்

கதறி அழுத வைகோ: கட்சி நிர்வாகி இறுதிச் சடங்கில் சோகம்..!!

கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், நேற்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பன்னீரின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, கட்சி நிர்வாகிகளிடையே பன்னீருடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து பேசுகையில், மேடையிலேயே கதறி அழுதுவிட்டார். முன்னதாக இருக்கமாக அமர்ந்திருந்த வைகோ, அனைவர் மத்தியிலும் துக்கத்தை அடக்கமுடியாமல் கதறி அழுதது, அங்கு இறுக்கமான சூழலை ஏற்படுத்தியது.

இதனைக்கண்ட கட்சியினரும் அங்கிருந்த பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இதனையடுத்து வைகோ பன்னீரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Categories

Tech |