வருகின்ற 22_ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்காக பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் , என்னுடைய பிரச்சாரத்தை வருகின்ற 22 ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலும் இருந்து தான் தொடங்குகிறேன் .ஏப்ரல் 14 மாலை 4 மணி வரை என்னுடைய பிரச்சாரம் நடைபெறும் .எங்களுடைய தேர்தல் அறிக்கை வருகின்ற 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார் .