Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியும் பண்ணுவாங்களா….? மர்ம நபர்கள் செய்த வேலை…. வேதனையில் வாடும் விவசாயிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வைக்கோல் போருக்கு தீ வைத்து எரித்து நாசப்படுத்திய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இட்டமொழி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். முத்துகிருஷ்ணனுக்கு ஊருக்குத் தெற்கே சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் முத்துகிருஷ்ணனின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த வைக்கோல் போரில் தீ பற்ற வைத்துள்ளனர். இதனால் தோட்டத்தில் வைத்திருந்த 250 கட்டு வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இரண்டு பசுமாடுகள் காயமடைந்தனர்.

இதேபோன்று இலங்கையாடிகுளம் பகுதிக்கு அருகே உள்ள கீழபண்டாரபுரம் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். அவர்களது கோழிப்பண்ணையில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போருக்கும் தீ வைத்துள்ளனர். இதனால் அங்கு வைக்கப்பட்ட 45 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் 2 பேரும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வைக்கோல் போருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Categories

Tech |