கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் படப்பு திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் சந்தனம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் வைக்கோல் போர்களை கால்நடைகளுக்கு தீவனமாக வைத்திருந்தார். இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தனம் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போர்கள் கொழுந்து விட்டு எறிந்த தீயை தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மானூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.