Categories
மாநில செய்திகள்

வைகோவுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கண்டனம்…!!

கேன்மங் பணியிடத்திற்கு 5000 நபர்களை பணியில் அமர்த்த வைகோ கோரிக்கை விடுததற்க்கு  கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் பிறர் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் 12000 ஒப்பந்த தொழிலாளிகள் கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு 86000 பேர் விண்ணப்பித்தும்,  15,000 நபர்கள்  தேர்வு எழுதியும், 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து கேன்மேனாக நியமிக்கப்படவுள்ளனர். இதனை எதிர்த்து பணிநியமத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகவும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்  மதிமுக பொது செயலாளர் வைகோ கேன்மேன் பணிக்கு புதிதாக தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என நேற்று அறிக்கை வெளியிட்டார். 15 ஆண்டுகளுக்கு மேலாக 12000 ஒப்பந்த தொழிலாளிகள் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நிலையில் வைகோவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தம் தொழிலாளர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |