Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்ல.. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா… குறித்து ஜெயக்குமார் நக்கல் பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள  வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார்.

டிடிவி தினகரனும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார். மூன்றாம் பிறை என்ற கமலஹாசன் படத்தில் ஸ்ரீதேவியும், கமலஹாசனும் நரி கதை ஒன்று வரும். நரி ஒன்று குதித்தவுடன் நீல சாயத்தில் விழுந்துவிடும், உடம்பெல்லாம் நீல சாயமாக மாறிவிடும். அது காட்டிற்கு சென்று நான்தான் ராஜா என்று எல்லா புலி, சிங்கத்தை ஏமாற்றி விடும், ஒரு நாள் நில அதிர்வு,  மழை இடி எல்லாம் வரும்போது.

எல்லாம் மிருகங்களும் பயந்து புது ராஜா வந்திருக்கிறார். அவரை பார்க்கலாம் என்று பார்த்தால், இது வெளியே வருவதற்கு அச்சப்பட்டது, அச்சப்பட்டு வெளியே வந்தாலும் உடனடியாக மழை பெய்து விட்டது. மழை பெய்தவுடன் அந்த நீல சாயம் வெளுத்துவிட்டது. அப்போது உண்மையான முகம்  தெரிஞ்சு போச்சு அதுதான் கமலஹாசன் அழகாக சொல்வார். அதுபோல் எல்லாம் நரிகளுடைய சாயங்களும் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது, அதனால் என்னதான் சாயம் பூசினாலும் அது வெளுத்துப் போகும்.

சசிகலா ஒன்றிணைவோம் என்று சொல்வது போல, அதற்கு வாய்ப்பே இல்லை,  வாய்ப்பில்லை.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், திருமதி சசிகலா வேண்டுமானால் ஒன்று சேரலாம். ஆனால் இவர்களெல்லாம் எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்றால் அது கண்டிப்பாக, ஜென்மத்திலும் நடக்காது என தெரிவித்தார்

Categories

Tech |