அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்குவது போல் நடித்த ஊழியரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பிரிட்டனிலிருக்கும் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இந்த வீடியோவை ஊழியர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணி நேரத்திலேயே 80 லைக்குகளையும், 1,00,000 பேர்களும் பார்த்துள்ளனர். இதனையடுத்து மயங்கி விழுந்த ஊழியரின் மீது பரிதாபப்பட்ட நெட்டிசன்கள், அவரை வேலை வாங்கிய நிறுவனத்தை சமூக வலைத்தளங்களில் திட்டினர்.
ஆனால் அந்த ஊழியர் பணி புரியும் இடத்திலிருந்து விடுமுறை வாங்குவதற்காக மயங்கி விழுவது போல் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி விடுமுறை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.