தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன்.
— வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன். தமிழிசையை வாழ்த்துகிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.