Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பாரபடச்சமின்றி கடைபிடிக்கனும்… வேண்டுகோள் விடுத்த காவல் துறையினர்… ஆலோசனை கூட்டம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறித்தி வியாபாரிகளிடம் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்து வரும் நிலையில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் காவல் துறையினர் சார்பில் புதிய கட்டுப்பாடுகளை வியாபாரிகளுக்கு முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளுக்கும் அவசர கலந்தாய்வு கூட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வியாபாரிகளும் பாரபட்சமின்றி புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமென்றும் நகர வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |