மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, 18 சித்தர்களின் தன்வந்திரி தனித்தனி சன்னதிகளில் தோன்றி பக்தர்களுக்கு அருள் தருகின்றனர்.
இந்த கோவிலுக்கு ரவிசங்கர் குருஜியின் சீடர் பிரணவானந்தா தலைமையில் ஸ்பெயின், கஜகஸ்தான், தைவான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பங்களாதேஷ், உருகுவே ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்கள் செவ்வாய் பகவான், அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சிவக்குமார் கவனித்துள்ளார்.