வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரமாங்குடி கணபதி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சுப்பிரமணியன் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.