நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக தோலுக்கடியில் இன்சுலின் ஊசி பொருத்தப்பட்டு வருகிறது.
உலகளவில் மக்கள் அனைவரும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வேதியல் ஆராய்ச்சியில் சிகரமாக நீரழிவு நோய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் விஞ்ஞானி பாரா பென்யட்டு மற்றும் வேதியியல் துறையின் திட்ட தலைவர் அலி டிரபோல்சி ஜி ஆர் கொண்ட நிபுணர் குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதாவது நீரழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்து பொதுவாக தோலுக்கடியில் செலுத்தப்படும் இந்த முறையை பாரம்பரியமாக செய்து வருவதால் இதனால் பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. ஆனால் இதற்கு மாறாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் வாய்வழி உட்கொள்ளும் இன்சுலின் மருந்தை உருவாக்கியுள்ளனர்.
மேலும் இந்த இன்சுலின் மருந்தை நேரடியாக நோயாளிகள் உட்கொள்ள முடியாததால் நானோ துகள்களாக மாற்றி அதன் மேற்பரப்பில் காஸ்ட்ரோ ரெசிஸ்டன்ட் இமைன் என்ற துகளுடன் கேவேலன்ட் ஆர்கானிக் பிரேம்ஒர்க் நானோ துகள்களை அதனுடன் இணைத்து உறைபோல அமைக்கப்படுகிறது. ஆகையால் இன்சுலின் நானோ துகள்களை கரிம ரசாயனங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் நீரழிவு உள்ள மனிதர்கள் அதனை அப்படியே உட்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை மனிதர்கள் உட்கொண்டவுடன் வயிற்றுக்குள் சென்றதும் பாதுகாப்பாக மேலுறை கரைந்து இன்சுலின் வெளிப்படுவதால் நானோ துகள்களை விழுங்கிய இரண்டே மணிநேரத்தில் சக்கரையின் அளவு சமநிலை படுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவன(எப்.டி.ஏ) அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்தை உட்கொள்வதால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு எவ்வித பின்விளைவும் பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு கொடையாக அமையும் மேலும் விரைவாக தீர்வளிக்கும் என்று கூறியுள்ளனர்.