Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் குறுஞ்செய்தி…. போக்குவரத்து காவலர்களின் செயல்…. வாகன ஓட்டிகள் கோரிக்கை….!!

வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களின் எண்களை குறித்துக் கொண்டு அவர்கள் அபராதம் விதித்துள்ளனர். அதன்பின் வாகன உரிமையாளரின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் சிக்னல் இல்லாத இடத்தில் போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மீறியதாகவும் மற்றும் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் அபராதம் விதித்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது. இதனால் சாதாரண கூலித் தொழிலாளர்கள் உள்பட பலரும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அவர்களுக்கு அபராதம் விதித்தும் அலட்சியமான போக்கை போக்குவரத்து காவலர்கள் கடைபிடித்து வருவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |