மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடைகுளம் பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் அவருடன் சேர்ந்து படிக்கும் நண்பரான பழனி முருகனும் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சங்கமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் 2 மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.