அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கரும்புக் கட்டுகள் ஏற்றிக்கொண்டு தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் ரகோத்தமன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.