வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தேர்தலை முன்னிட்டு முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கலெக்டரின் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற தேர்தல் கணினி அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலமாக வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆதலால் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் இணையதள முகவரியான http://www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியுடன் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்ற தேர்தல் கணினிப் பிரிவில் காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.