Categories
மாநில செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் முதல் கட்ட தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு 77.43% இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 78.47% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 78 தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து பாராளுமன்ற சட்டசபைத் தேர்தல் போல மின்னணு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெறாமல் பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு வைத்து அதில் வாக்காளர்கள் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போட்டுள்ளனர். மேலும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடந்து முடிந்தது. மேலும் வாக்குகளை எண்ணும் ஏஜெண்டுகள் பென்சில்கள் மட்டும் உள்ளே கொண்டு போக அனுமதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் முடிவில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுக அரசு சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.

அதன் பிறகு ஐந்து மாத ஆண்டுக்கு கிடைத்த நற்சான்று சாதனை சரித்திரம் தொடங்குவதற்கு மட்டுமல்ல செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரமாகவும் தேர்தல் வெற்றி அமைத்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது அரசியல் வாக்களித்த மக்களுக்கு நன்றி துண்டுகளின் வெற்றி கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |