Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பொய்யான புகாரை வாபஸ் வாங்குங்க… சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

வக்கீலின் உறவினரை அடித்து தாக்கியதால் அவரது தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலாக பணியாற்றி வரும் சென்னியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் வீரமணி, செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் சென்னியப்பனின் உறவினரான சரவணன் என்பவரிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் சென்னியப்பன் சண்டையை தடுக்க சென்றதால் அவரையும் தாக்கியுள்ளனர். இதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் சென்னியப்பன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சென்னியப்பன் குமரலிங்கம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் உட்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் 4 பேர் மீது மட்டுமே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் சென்னியப்பன் தரப்பினரான வக்கீல்கள் அமராவதி ஆற்றுப் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்தரப்பினர் சென்னியப்பன் மீதும், அவருடைய தந்தை மீதும் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாரை திரும்பி பெறுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து சென்னியப்பனை அடித்து தாக்கிய நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கில்களிடம்  காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |