வாக்குகள் எண்ணிக்கை மையத்திற்குள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு அடையாள அட்டை இல்லை என்றால் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் மொபைல் போன்களை கொண்டு வர அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு மட்டுமே வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் மொபைல் போனை எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்பின் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்குள் கட்சிப் பிரமுகர்கள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடையாள அட்டை இல்லாமல் வந்தால் உள்ளே அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மையத்தின் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கோடுகள் வரையப்பட்டிருக்கும் இந்த கோட்டிற்கு உள்ளே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குகள் எண்ணவிருக்கும் நிலையில் இதை சுமுகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.