வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட அறைகளின் முன்பாகவும், வளாகத்திலும் மற்றும் நுழைவு பகுதிகளிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 208 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்குப்பெட்டிகள் தனியார் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கல்லூரியை சுற்றிலும் காவல்துறை சூப்பிரண்டு மேற்பார்வையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 47 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் கல்லூரியின் இரண்டு நுழைவு வாயிலிலும் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு சுழற்சி முறையில் இரண்டு பிரிவுகளாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.