Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. வாக்கு பெட்டிகளுக்கு சீல்…. ஆட்சியரின் ஆய்வு….!!

தேர்தல் முடிந்ததால் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்ததை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமிரி ஒன்றியத்தில் மொத்தமாக 85,893 வாக்குகளில் 70,537 வாக்குகள் பதிவாகி 83.40 சதவீதம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமாக 86,686 வாக்குகளில் 72,138 வாக்குகள் பதிவாகி 83.22 சதவீதம் வாக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமாக 1,27,756 வாக்குகளில் 99,189 வாக்குகள் பதிவாகி 77.62 சதவீதம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.

எனவே மொத்தமாக மூன்று ஒன்றியங்களில் மொத்தமாக 3,00,365 வாக்குகளில் 2,42,964 வாக்குகள் பதிவாகி 80,89 சதவீதம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாலாஜா ஒன்றியத்தில் பதிவாகி இருக்கின்ற வாக்குகளை வாக்கு பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணவிற்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |