Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆதாரங்களுடன் வந்த புகார்…. வாக்கு சேகரிக்க சென்ற செயலாளர்…. ஆட்சியரின் உத்தரவு….!!

கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க சென்ற செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் 6,307 வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் வாக்காளர்கள் தங்களுடைய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் சோம நாயக்கன் பட்டி ஊராட்சி செயலாளரான சுந்தரமூர்த்தி அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ளார்.

இதனை உரிய ஆதாரங்களுடன் தேர்தல் பார்வையாளர் காமராஜரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் காமராஜர் கலெக்டரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆணையாளர் சங்கர் மூலமாக விசாரணை நடைபெற்ற நிலையில் சுந்தரமூர்த்தி அரசியல் கட்சியினருக்கு வாக்கு சேகரிக்க சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |