Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு அனுமதி இல்லை…. செல்போன் பயன்படுத்த தடை…. ஆட்சியரின் தகவல்….!!

வாக்குச்சாவடி மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தலைமை அலுவலரால் வாக்குப்பதிவு தொடங்கிய விவரம் மற்றும் பதிவான வாக்குகள் விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டி இருப்பதால் வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |