அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி உள்பட 3 ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் 389 பதவிகளுக்கு 982 வேட்பாளர்கள் போட்டிபோட்டனர்.
அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அமைதியான முறையில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.