Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே 2 வாக்கு எண்ணிக்கை…. கட்டுப்பாடுகளுடன் 816 பணியாளர்கள்…. குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு குலுக்கல் மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் சரியான பாதுகாப்புடன் இருக்கின்றது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 4 சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் விதமாக மொத்தம் 56 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் என மூன்று பேர்கள் வாக்கு எண்ணும் பணியில் இருக்க வேண்டும். மேலும் 56 மேஜைகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சேர்த்து, வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், மற்றும் பார்வையாளர்கள் என 216 பணியாளர்கள் வாக்கு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதேபோல வாக்கு எண்ணுபவர்களைத் தவிர, பிற பணிகளுக்கு 600 பணியாளர்கள் சேர்த்து 816 பேர் வாக்கு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு கணினி மூலமாக குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியானது கலெக்டர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |