Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்ததால்…. பிளம்பர்க்கு நடந்த பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருதரப்பினர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் மீது டெம்போ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரையில் அரிச்சந்திரன் என்ற பிளம்பர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிஷா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றது. இதில் அரிச்சந்திரன் மாலை வேளையில் வெண்டலிகோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளும் காரும் லேசாக மோதி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனை கண்ட அரிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஒரு டெம்போ சாலையில் இருதரப்பினர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த டிரைவர் தனது சுயநினைவை இழந்து திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த அரிச்சந்திரன் மீது மோதியுள்ளது. இதனால் அரிச்சந்திரன் டெம்போ சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து டெம்போவை ஓட்டிவந்த டிரைவர் குலசேகரம் சங்கரன்விளையை சேர்ந்த பால்ராஜ் தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். எனவே இந்த விபத்திற்கு காரணம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் தான் என்று அப்பகுதி மக்கள் அவர்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் காவல்துறையினர் அரிச்சந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |