Categories
சினிமா தமிழ் சினிமா

வாழ வைக்கும் தெய்வங்கள் ரசிகர்கள்…. நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார்….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 45 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். ஆதலால் ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு ரஜினி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில்” என்னுடைய திரையுலக பயணத்தில் நாற்பத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவுபெறும் இந்த நாளில் என்னை வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி. மேலும் “நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்ற ஹாஸ்டேக் இணைத்து பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |