Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடியா….? அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

அருமனை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்துக்குள் மிளகாய்பொடி தூவப்பட்டு, ஏ.டி.எம் எந்திரம்  உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அரண்மனை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம் மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முடியாததால் மிளகாய் பொடியை தூவி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஏ.டி.எம் மையத்தில் பல லட்சம் ரூபாய்கள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி விட்டது. அதன்பின் ஏ.டி.எம் மையத்தின் எதிரே இருக்கும் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஏ.டி.எம் மையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆதாரங்களையும் வங்கி நிர்வாகத்திடம் கேட்டு இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆகவே அந்த சிசிடிவி ஆதாரங்கள் கைப்பற்றிய பின்புதான் கொள்ளையடிக்க வந்த அந்த மர்ம நபர்கள் யார் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |