வலைதளம் மூலமாக நிசான் மைக்ரோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்பு நிசான் நிறுவனம் சார்பாக மைக்ரா வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அதற்கு அடுத்த மாடல்களை இந்தியாவில் நிசான் நிறுவனம் வெளியிடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே வகை கார் ஒன்றின் EV வடிவ மாடல் வெளியாகியிருக்கிறது.
அதன் டீசரில் சிறிய பாடி, வட்ட வடிவ LED லைட்கள் தெரிகின்றது. இந்த கார் என்ட்ரி லெவல் காராக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அந்த நிறுவனத்தின் CMF B-EV Platform சார்ந்து இருக்கும் என கருதப்படுகின்றது. இதனையடுத்து காரின் உருவாக்கத்தில் அதன் துணை நிறுவனமான ரெனால்ட் நிறுவன முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இந்த கார் ஐரோப்பாவில் விற்பனை செய்ய வசதியாக ரெனால்ட் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின் வரும் ஆண்டுகளில் இதைப்போல பல நிசான் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் அறிமுகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும். மேலும் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் ஆகுமா என்பது ரெனால்ட், நிசான் ஆகிய நிறுவன கார்களின் இந்திய விற்பனையை பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.